Saturday, January 29, 2011

sri meenakshi amman 108 potri


மதுரை திரு மீனாட்சி அம்மன் போற்றி:

1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
4. ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி
5. ஓம் அரசிளங்குமரியே போற்றி
6. ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி
7. ஓம் அமுத நாயகியே போற்றி
8. ஓம் அருந்தவ நாயகியே போற்றி
9. ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி


11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
12.ஓம் ஆதியின் பாதியே போற்றி
13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி
14.ஓம் ஆனந்தவல்லியே போற்றி
15.ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
16.ஓம் இமயத்தரசியே போற்றி
17.ஓம் இடபத்தோன் துணையே போற்றி
18.ஓம் ஈசுவரியே போற்றி
19.ஓம் உயிர் ஓவியமே போற்றி
20.ஓம் உலகம்மையே போற்றி


21.ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
22.ஓம் எண்திசையும் வென்றோர் போற்றி
23.ஓம் ஏகன் துணையே போற்றி
24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
25.ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி
26.ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
27.ஓம் ஓங்காரசுந்தரியே போற்றி
28.ஓம் கற்றோர்க்கினியோய் போற்றி
29.ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
30.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி



31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி
33.ஓம் கற்பின் அரசியே போற்றி
34.ஓம் கருணயூற்றே போற்றி
35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி
36.ஓம் கனகாம்பிகையே போற்றி
37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி
40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி


41.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
42.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
43.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
44.ஓன் கூடற்கலாப மயிலே போற்றி
45.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
46.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
47.ஓம் சக்தி வடிவே போற்றி
48.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
49.ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
50.ஓம் சித்தந்தெளிவிப்பாய் போற்றி


51.ஓம் சிவயோக நாயகியே போற்றி
52.ஓம் சிவானந்த வல்லியே போற்றி
53.ஓம் சிங்கார வல்லியே போற்றி
54.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
55.ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
56.ஓம் சேனைத் தலைவியே போற்றி
57.ஓம் சொக்கர் நாயகியே போற்றி
58.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
59.ஓம் ஞானாம்பிகையே போற்றி
60.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி


61.ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
62.ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி
63.ஓம் திருவுடை யம்மையே போற்றி
64.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
65.ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
66.ஓம் திருநிலை நாயகியே போற்றி
67.ஓம் தீந்தமிழ்ச் ச்சுவையே போற்றி
68.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
69.ஓம் தென்னவன் செவ்வியே போற்றி
70.ஓம் தேன்மொழியம்மையே போற்றி


71.ஓம் தையல்நாயகியே போற்றி
72.ஓம் நற்கனியின் சுவையே போற்றி
73.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
74.ஓம் நல்ல நாயகியே போற்றி
75.ஓம் நீலாம்பிகையே போற்றி
76.ஓம் நீதிக்கரசியே போற்றி
77.ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
78.ஓம் பழமறையின் குருந்தே போற்றி
79.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
80.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி





81.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
82.ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
83.ஓம் பசுபதி நாயகியே போற்றி
84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
85.ஓம் பாண்டிமா தேவியே போற்றி
86.ஓம் பார்வதி அம்மையே போற்றி
87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
88.ஓம் பெரியநாயகியே போற்றி
89.ஓம் பொன்மயிலம்மையே போற்றி
90.ஓம் பொற்கொடி அம்மையே போற்றி

91.ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
92.ஓம் மங்கள நாயகியே போற்றி
93.ஓம் மழலைக் கிளியே போற்றி
94.ஓம் மனோன்மணித்தாயே போற்றி
95.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
96.ஓம் மாயோன் தங்கையே போற்றி
97.ஓம் மாணிக்கவல்லியே போற்றி
98.ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
99.ஓம் மீனாட்சியம்மையே போற்றி


100.ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
101.ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
102.ஓம் யாழ்மொழியம்மையே போற்றி
103.ஓம் வடிவழகம்மையே போற்றி
104.ஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி
105.ஓம் வேதநாயகியே போற்றி
106.ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
108.ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

உமையம்மை வழிபாடு:

வண்டுவார் குழலி மாதா போற்றி
செண்டா டும்விடைச் சிவையே போற்றி
உண்ணா முலையெம் உயர்ந்தாய் போற்றி
கண்ணார் கமுகுக் கழுத்தே போற்றி
பெருந்துறை அரசி பெண்கனி போற்றி
முருந்தோர் முறுவல் முதல்வி போற்றி
வேற்கண் அம்மை மீன்கணி போற்றி
நாற்பெரும் பயந்தரும் நங்காய் போற்றி
மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
மின்னொளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி





அன்னை மீனாட்சி. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்

8 comments:

  1. Nandri, nandri nandri for posting 108 potris of Mudarai Meenakshi Amman. I love amma so much. G.Thangarajesh

    ReplyDelete
  2. There is no word to tell about Her Grace and Divinity. She is beyond words. Yet within words.

    ReplyDelete
  3. Thanks for posting. Very helpful. Thanks a lot

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Thank you ...ohm sakthi 🙏🙇

    ReplyDelete
  6. Thanks doctor. It's great help for people in needed of this potrigals

    ReplyDelete