Wednesday, February 27, 2013



கோரக்கர்- மந்திர ஜெபம்


கோரக்கர் தனது "ரவிமேகலைஎன்னும் நூலில்
 இந்த முறையினை விளக்கி இருக்கிறார்
பூசித்திடு மூலமுதல் மந்திரத்தைப் போற்றி
புகன்றிடுவேன் லெட்சமுரு ஆவர்த்தி கொள்போற்றி
காப்பதற்கு ஆயுள்விருத்தி மூலமந்திர மோது
காலனற்றுப் போய்விடுவா னில்லைநாளுந் தீது
ஏர்ப்பதற்காய் இன்னமுண்டு இயம்பிடுவேன் மீது
இன்பமுடன் மந்திர செபங்கள் செய் தப்பாது
பூர்த்திசெய் துகந்துகண்டு கொள்வாய் மூலத்தாது
புன்மலத்தில் ஆசையற்றுப் போய்விடும்பொய் சூது
நேர்த்தியாப்பின் அபமிருந்து மூலஞ்சொல்நீ சாது
நிலைத்திடுமுன் காயமாவி இல்லையேமன வாது
                                  .-கோரக்கர்



மூலமந்திரம்
"ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சாக்ஷிரி ரிங் ரிங் குர
தக்ஷணி நகுலக் ஸ்ரீரீங்
ககலுக் டங் லுங்
அக்ஷரி ஹரிபிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக்மம துயிருள் நீடித்தே நமஹா."
(
ஒரு லட்சம் முறை
)

ஆயுள் விருத்தியும்உடலுக்கு பாதுகாப்பும் கிடைக்க தான் 
அருளும் மூல மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்தால்போதும் என்கிறார்.
 இப்படி செய்வதன் மூலம் எமன் பயம் இனி இல்லாது போகும் என்றும் கூறுகிறார்.
மந்திரங்களை செபிப்பது ஒருபோதும் தவறாகாதுஇந்த உண்மையை செபத்தை 
பூர்த்தி செய்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார்
இந்த மந்திரத்தைசெபம் செய்வதால் மனதின் ஆசைகள்பொய் சூது நீங்குமாம்.

Sunday, February 24, 2013

நட்சத்திர மரங்கள்


தோஷத்தை போக்கும் நட்சத்திர மரங்கள்

நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும் சில சமயம் தோஷம் ஏற்படும். ஆனால் இறைவனால் படைக்கபட்ட அனைத்துமே சக்தி வாய்ந்ததுதுான். அப்படி இருக்கும்போது, நட்சத்திரங்களும் சக்தி வாய்ந்ததாகதானே இருக்கும்? அது எப்படி பலவீனமாக மாறும்? தோஷம் பிடிக்கும்? என கேள்வி எழலாம்.
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனி தனி பாதங்கள் இருக்கிறது. அதாவது, முதல் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று பாதங்கள் இருக்கிறது. ஒருவேளை அந்த பாதங்கள் பலவீனமாக அமைந்துவிட்டால், அந்த நட்சத்திரம் நமக்கு கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்காமல் தாமதம் செய்யும்.
அப்படிப்பட்ட அந்த தோஷத்தை போக்கும் ஆற்றல் நட்சத்திர மரங்களுக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு செவ்வாய்தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டினால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் என்கிறது சாஸ்திரம்.
சரி இப்போது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற மரம் எது? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வொம்.

27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள்

அஸ்வினி – எட்டி
பரணி – நெல்லி
கிருத்திகை – அத்தி
ரோகிணி – நாவல்
மிருகசீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்பூசம் – மூங்கில்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – அல்
பூரம் – பலா
உத்திரம் – அலரி
ஹஸ்தம் – அத்தி
சித்திரை – வில்வம்
சுவாதி – மருதம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழ்
கேட்டை – பிராய்
மூலம் – மரா
பூராடம் – வஞ்சி
உத்திராடம் – பலா
திருவோணம் – எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூராட்டாதி – தேமா
 உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை.
இப்படி நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும். 
ஆலயத்தில் தீபம் ஏற்றினால் அந்த தீப ஒளி நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரும் என்பதைபோல, நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வைக்கும்போது, நம் நட்சத்திர மரம் எந்த அளவுக்கு பசுமையாக வளர்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்கள் ஏற்படும் என்கிறது விருக்ஷ சாஸ்திரம்.


விருச்ச சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் 
நட்சத்திரம் பாதம்  அறிந்து மரங்களை நடுங்கள்.

குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள்.
தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள்.
உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.
                                                    நாடும் நலம் பெரும். 

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை 


ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
 

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் -  நீர்க்கடம்பு
 

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - 
வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
 

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
 

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
 

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
 

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
 

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
 

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
 

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி

4 ம் பாதம் - தங்க அரளி
 

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
 

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
 

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
 

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
 

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
 

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
 

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
 

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
 

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
 

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
 

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
 

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர் 

3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
 

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா 









Monday, February 18, 2013

திருச்சிற்றம்பலம்: அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

திருச்சிற்றம்பலம்: அற வழியில் நால்வர்: ஒரு பார்வை: அற வழியில் நால்வர்: ஒரு பார்வை பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியைப் பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் செ...

திருச்சிற்றம்பலம்: தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முற...

திருச்சிற்றம்பலம்: தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முற...:                                                                             உ                                                           ...

திருக்குறுக்கை-'அட்ட வீரட்டானம்'

அட்ட வீரட்டத் தலங்களிலொன்றான திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்





திருமந்திரம் 


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே         (திருமந்திரம் 346)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

திருக்குறுக்கை - திருநேரிசை

(நான்காம் திருமுறை)

ஆதியிற் பிரம னார்தாம் 
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர் 
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் 
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நீற்றினை நிறையப் பூசி 
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும் 
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று 
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் 
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் 
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

சிலந்தியும் ஆனைக் காவிற் 
திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே 
கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் 
சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஏறுடன் ஏழ டர்த்தான் 
எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை 
அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய 
மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே

கல்லினால் எறிந்து கஞ்சி 
தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே 
நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி 
எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே

காப்பதோர் வில்லும் அம்புங் 
கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் 
தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக் 
குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நிறைமறைக் காடு தன்னில் 
நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் 
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் 
நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

அணங்குமை பாக மாக 
அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் 
மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து 
காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

எடுத்தனன் எழிற் கயிலை 
இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற 
அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால் 
வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நெடியமால் பிரம னோடு 
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார் 
அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித் 
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்தமாம் அயனு மாலும் 
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று 
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன் 
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

திருச்சிற்றம்பலம்              திருச்சிற்றம்பலம்         திருச்சிற்றம்பலம்



                                          
 
 
மூலவர்:வீரட்டேஸ்வரர்
 உற்சவர்:யோகேஸ்வரர்
 அம்மன்/தாயார்:ஞானம்பிகை
 தல விருட்சம்:கடுக்காய் மரம், அரிதகிவனம்
 தீர்த்தம்:திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம்
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:திருக்குறுக்கை
 ஊர்:கொருக்கை
 மாவட்டம்:நாகப்பட்டினம்
 மாநிலம்:தமிழ்நாடு
 



 தல சிறப்பு:
   
 ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.


   
 பொது தகவல்:
   
 இத்தலவிநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.



காம சம்கார மூர்த்தி: அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள்:  இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.
 
   
 
பிரார்த்தனை
   
 அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும்.  இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்  அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம். 
   
நேர்த்திக்கடன்:
   
 கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
   
 தலபெருமை:
   
 பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும்.

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.
 
   
  தல வரலாறு:
   
 சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார்.ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.

உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.